History

1. எமது நாட்டை ஆட்சி செய்த பிரித்தானிய நாட்டவர்கள்.
போர்த்துக்கேயர் கி.பி 1505-1658
ஓல்லாந்தர்  கி.பி 1658-1796
ஆங்கிலேயர்  கி.பி 1796-1948

2. எமது நாட்டில் அதிக காலம் ஆதிக்கம் செலுத்தி அரசியல், பொருளாதாரம், சமூகம் முதலியவற்றில் மாற்றத்ததை ஏற்படுத்திய ஐரோப்பியர்.
ஆங்கிலேயர்
3. இலங்கையில் பிரித்தானியர் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிய விதத்தினை தருக.

1796 இலங்கையின் கரையோரப்பிரதேசத்தை தமது ஆதிக்கத்துக்குட்படுத்தல்
1802 கரையோரப்பிரதேசங்களை இலங்கையின் முடிக்குரிய பிரதேசமாக்கியமை
1815 கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டமை
1818 மலையக சுதந்திர கிளர்ச்சியை முறியடித்து ஆங்கிலேயர் ஆட்சியை உறுதிப்படுத்தியமை
1833 கோல்குறுக்  சிபார்சுகளின் மூலம் அரசியல் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு ஆங்கில ஆட்சி முறை ஆரம்பிக்கப்பட்டமை


1793-1948 வரை இலங்கையுடனான தொடர்பு
4. பிரித்தானியர் இலங்கையை கைப்பற்ற அடிப்படையாக அமைந்த காரணங்கள்
இலங்கையின் கேந்திர நிலையம் :-
இந்து சமுத்திரத்தின் கப்பற் பாதை அமைந்து இருந்தமை இந்தியாவின் கிழக்கு வர்த்தக கப்பற்துறை கடற்படைக் கருமங்களை இலங்கையிலிருந்து நிர்வகிக்கக்கூடியதான திருகோணமலைத் துறைமுகம் காணப்பட்டமை

வர்த்தக நோக்கம் :- 
இலங்கையின் கறுவாவிற்கு ஐரோப்பாவில் இருந்த மதிப்பு இலங்கையின் கறுவா, வாசனைப் பொருள்கள் வர்த்தகத்தில் அதிக இலாபமீட்டியமை மூலப்பொருட்களைப் பெறுதல், சந்தை வாய்ப்பு விரிவுபடுத்தல் சீனாவுடனான வர்த்தகத்தை பாதுகாத்தல்.

குடியேற்றவாதக் கொள்கை
கிழக்கில் கீழத்தேய சாம்பிரதாயத்தை விரிவுபடுத்தல் அடிப்படை நோக்கமாக மாறியமை
இந்தியாவில் பிரித்தானியர், பிரன்சியர் போட்டி ஏற்பட்டமை

மலையக மன்னனுடனான தொடர்பு
கீர்த்தி ஸ்ரீ இராச சிங்கள் ஒல்லாந்தை இலங்கையில் இருந்து விரட்டுவதற்கு பிரித்தானியரிடம் உதவியை நாடியமை
1762 யோன்பைபஸ், 1782 இல் ஹியுபோயிட் தூதுக்குழுக்களின் வருகை

ஓல்லாந்த குடியரசின் வீழ்ச்சி 
ஓல்லாந்து இளவரசன் பிரித்தானியரிடம் தஞ்சம் அடைந்தமை
கியுகடிதத்தின் மூலம் இலங்கையின் கரையோரப்பிரதேசங்களை தம்வசப்படுத்தியமை

5. பிரித்தானியர் இலங்கையை கைப்பற்றுவதற்கு திருகோணமலையின் முக்கியத்துவம்.
v இந்தியாவின் பாதிகாப்பிற்கு  சிறந்த அரனாக திருகோணமலைத் துறைமுகம விளங்கியமை
v பிரான்சியப்படை சென்னையைததாக்கும் கோர் உதவிப்படையை அனுப்பு முடியாமை
v வடகீ; பருவக்காற்ற முடியுமளவும் பிரித்தானிய கடற்படை பம்பாயில் தங்கியிருக்க நேரிட்டமை
v கல்கத்தா துறைமுகம் இந்தியாவின் கிழக்கு கரையோரத்தில் இருந்தமையால் அது பயனற்றதாக காணப்பட்டமை
v பருவக்காற்றுக் காலங்களில் இந்தியாவின் துறைமுகங்களில் கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தமுடியாததாக இருந்தமை
v பெரும் தொகையான கப்பல்கள் ஒரேநேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கக் கூடிய வசதி திருகோணமலைத் துறைமுகத்தில் காணப்பட்டமை
v 1746 1795 க்குமிடையில் வடகீழ் பருவக்காற்றுக் காலத்தில் பிரித்தானியர் திருகோணமலைத் துறைமுகத்தை 15 தடவைகள் பாவித்தமை, தென்மேற்கு பருவக்காற்றுக் காலங்களில் 11 தடவைகள் பாவித்தமை

6. கியு கடிதம் என்றால் என்ன?
v பிரான்ஸ், ஒல்லாந்து எதிரிநாடுகள்
v ஒல்லாந்து இளவரசன் 2ம் வில்லியம்ஸ மன்னன் ஸ்டெப் ஹோல்டர்
v 1789 பிரான்ஸ் புரட்சி
v பிரான்ஸ் அயல் நாடுகளைக் கைப்பற்றியமை
v பிரன்சில் முடியாட்சி நீங்கி குடியாட்சி ஆரம்;பம்
v 1794 பிரான்ஸ் ஒல்லாந்தை ஆக்கிரமிப்பு
v இளவரசர் வில்லியம்ஸ் பாதுகாப்புக்காக இங்கிலாந்து ஓடியமை
v கியு மாளிகையில் தஞ்சம்புகுந்தை
v இலங்கையை கைப்பற்றுவதற்கு பிரித்தானியர் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தமை
v வில்லியம் மன்னனிடம் இருந்து ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இலங்கையின் கரையேரப்பிரதேசத்தை பிரித்தானியருக்கு தற்காலிகமாக கையளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
v கியு மாளிகையில் வைத்து எழுதப்பட்டதால் இது கியு கடிதம் எனப்பட்டது.

7. கீழத்தேயத்தில் வர்த்தக நடவடிக்கை ஈடுபடுவதற்கு உருவாக்கப்பட்ட கம்பனி எது? இது யாரால் எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
v ஆங்கில கிழக்கிந்திய வர்த்தக கம்பனி
v முதலாம் எலிசபத் மகாரணி
v கி.பி 1600


No comments:

Post a Comment