Sunday, November 17, 2013

தடை (Block) செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பதற்கு ஓர் சிறந்த மென்பொருள்!

சில நாடுகளில் அந்த நாட்டு விதிமுறைகளுக்கு இனங்க சில இணையத்தளங்கள் தடை (Block ) செய்யப்படுகின்றன அதேபோல் பாடசாலை ,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களிலும் கூட இவ்வாறு சில தளங்கள் தடைசெய்யப்படுகின்றன அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு Hotspot Shield என்னும் மென்பொருள் பயன்படுகின்றது
Hotspot Shield மென்பொருளின் பயன்பாடுகள்
உங்கள் கணனியின் IP முகவரியினை மறைத்து போலி IP முகவரியினை உருவாக்கி தடை செய்யப்பட இணையத்தளங்களை பார்ப்பதற்கு உதவுகிறது
கணனிக்கு கெடுதல் விளைவிக்கும் மால்வேர் உள்ள இணையத்தளங்களை கண்டறிந்து தடை செய்கின்றது
பாதுக்காப்பான இணைய சேவையினை நமக்கு வழங்கின்றது
Hotspot Shield மென்பொருளை இங்கு சென்று Download செய்து உங்கள் கணனியில் Install செய்து கொள்ளவும்
Hotspot Shield மென்பொருள் மூலம் எவ்வாறு தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பது?
Hotspot Shield மென்பொருளை உங்கள் கணனியில் Install செய்த பிறகு Open செய்து கொள்ளவும் கீழே உள்ளவாறு Hotspot Shield UNPROTECTED ,CONNECT என்று வரும் நீங்கள் Connect இல் Click செய்யவும்.


Hotspot Shield Connect ஆன பிறகு கீழே படத்தில் உள்ளவாறு வரும் இப்படி வந்தவுடன் உங்கள் கணனியின் IP முகவரி மறைக்கப்பட்டு போலி IP முகவரி உருவாக்கப்பட்டு விடும் இனி நீங்கள் உங்களுடைய Web Browser  திறந்து எந்தவொரு தடைசெய்யப்பட்ட இணையத்தளமானாலும் பார்வையிடலாம்.


Hotspot Shield மென்பொருளை திறந்தவுடன் கீழே மூன்று Icon இருக்கும் அதில் முதலாவதாக உள்ள Setting Icon click செய்து அதில் General என்னும் பகுதியில் Show on restart மற்றும் Show status icon என்று இரண்டிற்கும் டிக் வைக்கப்பட்டு இருக்கும் நீங்கள் இரண்டாவதாக உள்ள Show status iconஎன்பதில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு கீழே படத்தில் உள்ளவாறு APPLY கொடுக்கவும் இவ்வாறு செய்தால் Hotspot Shield இன் உடைய Icon உங்கள் Web Browser களில் தோன்றாது அவ்வளவுதான்.


குறிப்பு: இந்த மென்பொருளை Connect செய்து இணையத்தளங்களை பார்வையிடும் பொழுது சில விளம்பரங்கள் தோன்றும் அதனால் உங்களின் இணைய வேகம் கொஞ்சம் குறைவாக இருக்கும் ஆகவே உங்களுக்கு தேவையான நேரங்களில் மட்டும் இதனை Connect செய்து பயன்படுத்திக்கொள்ளவும்


No comments:

Post a Comment